பதிவு செய்த நாள்
24 அக்2014
02:50

புதுடில்லி :நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபர் 15ம் தேதி வரையிலான காலத்தில், முன்பேர சந்தைகளின் விற்றுமுதல், 53.49 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 31.82 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 68.43 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, பார்வர்டு மார்க்கெட்ஸ் கமிஷன் (எப்.எம்.சி.,) புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டு காலத்தில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான முன்பேர வர்த்தகம், 63.52 சதவீதம் சரிவடைந்து, 30.82 லட்சம் கோடியிலிருந்து, 11.24 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதே போன்று, வேளாண் விளைபொருட்கள் மீதான வர்த்தகமும், 22.85 சதவீதம் குறைந்து, 8.10 லட்சம் கோடியிலிருந்து, 6.25 லட்சம் கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.மேலும், இதர உலோகங்கள் மீதான முன்பேர வர்த்தகமும், 45.14 சதவீதம் வீழ்ச்சிகண்டு, 12.65 லட்சம் கோடியிலிருந்து, 6.94 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இவை தவிர, மதிப்பீட்டு காலத்தில், எரிசக்தி மீதான வர்த்தகமும், 56.16 சதவீதம் சரிவடைந்து, 16.48 லட்சம் கோடியிலிருந்து, 7.39 லட்சம் கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.இருப்பினும், நடப்பு அக்டோபர் மாதத்தின் முதல் 15 தினங்களில், எரிசக்தி மீதான வர்த்தகம் மட்டும், 6.96 சதவீதம் வளர்ச்சி கண்டு, 60,475 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 56,539 கோடி ரூபாயாக இருந்தது என, எப்.எம்.சி., புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|