பதிவு செய்த நாள்
24 அக்2014
03:06

மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், தீபாவளியை முன்னிட்டு, நேற்று முகூர்த்த வணிகம் எனும் சிறப்பு வர்த்தகம் நடைபெற்றது. இதில், முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
முகூர்த்த வணிகம் என்பது, நுாறு ஆண்டு களுக்கு முன்னரே துவங்கப்பட்டது. செல்வச் செழிப்புக்கான கடவுளான, மகாலட்சுமியை போற்றும் விதத்தில், இந்த வணிகம் நடத்தப்படுகிறது.மேலும், இந்துமத நாட்காட்டியின்படி, சாம்வாட் 2071 புத்தாண்டின் துவக்க தினத்தை முன்னிட்டு, புதிய கணக்கை முதன் முதலில் துவக்கும் வகையிலும், இந்த சிறப்பு முகூர்த்த வணிகம் நடத்தப்படுகிறது.பங்குச் சந்தைகளில், நேற்று மாலை நடைபெற்ற இந்த வர்த்தகத்தில், மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், 63.82 புள்ளிகள் உயர்ந்து, 26,851.05 புள்ளிகளில் நிறைவுஅடைந்தது.
மேலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி'யும், 18.65 புள்ளிகள் அதிகரித்து, 8,014.55 புள்ளிகளில் நிலைகொண்டது.நேற்றைய வியாபாரத்தில், நுகர்வோர் சாதனங்கள், பொறியியல், உலோக துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு, முதலீட்டாளர்களிடையே அதிக வரவேற்பு காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|