பதிவு செய்த நாள்
24 அக்2014
23:54

காந்திகிராமம்:எல்.இ.டி., பல்புகளின் ஆயுட்காலம் மற்றும் ஒளிச்செறிவை அதிகரிக்க, காந்திகிராம பல்கலையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எல்.இ.டி., பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும், எல்.இ.டி., பல்புகளின் தயாரிப்பு செலவு மிகவும் அதிகம். எனவே, குறைந்த செலவில் செறிவுமிக்க எல்.இ.டி.,களை உருவாக்க, இந்திய ஆராய்ச்சியாளர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
காந்திகிராம பல்கலையின் இயற்பியல் துறை, எர்பியம், இடர்பியம் போன்ற அரியவகை தனிமங்களை, படிவ உருவமற்ற போரோ-டெலுரைடு கண்ணாடியில் செலுத்தி, அதிக ஒளியாற்றல் கொண்ட எல்.இ.டி.,களை உருவாக்க, ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முறைக்கான செலவும், மின்தேவையும் குறைவு.இதற்காக, இந்திய அணுசக்தித் துறை, பெரிய அளவிலான ஆராய்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.22.19லட்சத்தை ஒதுக்கியுள்ளது.
இயற்பியல் துறை உதவி பேராசிரியர், கே.மாரிமுத்து கூறியதாவது:ஈரோபியம், எர்பியம், இடர்பியம் போன்ற அரிய வகை தனிமங்கள், இந்தியாவில் கிடைக்கிறது. இந்த வகை தனிமங்களை பயன்படுத்தி, செறிவுமிக்க எல்.இ.டி.,யை உருவாக்க முடியம். இந்த எல்.இ.டி., மூலம் தயாரிக்கப்படும் ஒளிர் பொருட்களுக்கு, ஆயுட்காலம், ஒளிச்செறிவு அதிகம்; கண்களுக்கு பாதுகாப்பானது. இத்தகைய ஒளிர்பொருட்களை ராணுவத்தில் பயன்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|