பதிவு செய்த நாள்
24 அக்2014
23:56

புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி, பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை, 2.25 கோடியாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு செப்டம்பர் நிலவரப்படி, 2.15 கோடியாக இருந்தது.ஆக, ஓராண்டு காலத்தில் மட்டும், 10 லட்சம் புதிய டீமேட் கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன.
என்.எஸ்.டீ.எல்., மற்றும் சி.டீ.எஸ்.எல்., ஆகிய இரண்டு டிபாசிட்டரி நிறுவனங்கள், முதலீட்டாளர்களின் டீமேட் கணக்குகளை நிர்வகித்து வருகின்றன.இவை, முதலீட்டாளர்களின் பங்குகள், கடன்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை, மின்ணணு வடிவில் பராமரித்து வருகின்றன. நடப்பாண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்படி, என்.எஸ்.டீ.எல்., மற்றும் சி.எஸ்.டீ.எல்., ஆகிய இரு நிறுவனங்களின் டீமேட் கணக்குகள் முறையே, 1.34 கோடி மற்றும் 91.23 லட்சமாக உள்ளன. இவை, கடந்தாண்டின் இதே மாத நிலவரப்படி முறையே, 1.29 கோடி மற்றும் 85.60 லட்சமாக இருந்தன.
செப்டம்பர் இறுதி நிலவரப்படி, மேற்கண்ட இரண்டு நிறுவனங்களிடம், மின்ணணு வடிவில் உள்ள முதலீட்டு ஆவணங்களின் மொத்த மதிப்பு, 121 லட்சம் கோடி ரூபாயாகும். இது, கடந்தாண்டுடன் இதே காலத்துடன் ஒப்பிடுகையில், 64 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|