ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.32 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.32 குறைவு ... சுவிட்சர்லாந்து தங்கம் இந்தியா வந்ததன் பின்னணி என்ன? சுவிட்சர்லாந்து தங்கம் இந்தியா வந்ததன் பின்னணி என்ன? ...
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.6 சதவீதம்: உலக வங்கி மதிப்பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2014
01:50

புதுடில்லி: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும் என, உலக வங்கி மதிப்பீடு செய்துள்ளது.இது, வரும் 2015 – 16ம் நிதியாண்டில், 6.4 சதவீதமாகவும், 2016 – 17ல், 7 சதவீதமாகவும் அதிகரிக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சேமிப்பு விகிதம் சிறப்பான அளவில் இருப்பது, திறன் மற்றும் கல்வியை மேம்படுத்த நடவடிக்கை, உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவித்தல் போன்றவை, இந்தியாவின் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு, சாதகமான சூழ்நிலைகளாக விளங்குவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதேசமயம், சர்வதேச பொருளாதார சுணக்க நிலை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, உலக அரசியல் நெருக்கடி, நிதி சந்தையில் ஏற்படும் இடர்பாடுகள் போன்றவை, பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் வெளிப்புற காரணிகளாக அமையும்.மேலும், எரிசக்தி வினியோகத்திற்கு எதிரான சவால்கள், குறுகிய கால பலவீன வருவாய் வசூலால் ஏற்படும் நிதி நெருக்கடி போன்றவை, உள்நாட்டில், பொருளாதார வளர்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் பாதகமான அம்சங்களாக இருக்கும்.இருப்பினும், பொருட்கள் மற்றும் சேவை வரியை அமல்படுத்துதல் உள்ளிட்ட சீர்த்திருத்த நடவடிக்கைகளால், இந்தியா, சர்வதேச அளவில் பொது சந்தையாக உருவெடுப்பதோடு, போட்டி தன்மையையும் அதிகரிக்கும்.இவை, உள்நாட்டு மற்றும் வெளிப்புற இடர்பாட்டை ஈடு செய்ய உதவும் என, உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)