பதிவு செய்த நாள்
29 அக்2014
23:51

கெய்ரோ: இந்திய உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பான செயல்பாட்டை கொண்டுள்ளதாக, எகிப்து பிரதமர் இப்ராகிம் மெகலப் பாராட்டு மழை பொழிந்துள்ளார்.இந்திய நிறுவனங்கள், எகிப்தில் உற்பத்தி ஆலைகளை அமைத்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக, டி.சி.ஐ., சன்மார் நிறுவனம், எகிப்தில் பல கோடி ரூபாய் செலவில், ரசாயன ஆலையை அமைத்து, வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. இதை சுற்றிப் பார்த்த, எகிப்து பிரதமர் மெகலப், அந்நிறுவனத்தின் உற்பத்தி செயல்பாட்டை வெகுவாக புகழ்ந்தார்.டி.சி.ஐ., சன்மார் நிறுவனம், 2,000 எகிப்தியர்களுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலைவாய்ப்பை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து எகிப்திற்கான இந்திய துாதர் நவ்தீப் சூரி கூறியதாவது:எகிப்து பிரதமர் சுய விருப்பத்தின் பேரில், மூத்த அமைச்சர்களுடன் இந்திய ஆலையை சுற்றி பார்த்துள்ளார். இது, இந்திய முதலீட்டை மேலும் அதிகரிக்க உதவும் சாதகமான அறிகுறியாகும். பல்வேறு தொழில் முறையை கொண்ட 50 இந்திய நிறுவனங்கள், எகிப்தில், 250 கோடி டாலருக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்துள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|