பதிவு செய்த நாள்
29 அக்2014
23:54
புதுடில்லி: இந்தியாவின் பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, சென்ற செப்டம்பரில், 20 சதவீதம் வளர்ச்சி கண்டு, 648 கோடி டாலராக (38,880 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தேவை அதிகரித்ததையடுத்து, இந்திய பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி வேகமெடுத்துள்ளது.ஜோர்டான்கடந்த 2013ம் ஆண்டு, செப்டம்பரில், பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 538 கோடி டாலர் (32,280 கோடி ரூபாய்) என்ற அளவில் இருந்தது என, வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில், பொறியியல் சாதனங்களின் பங்களிப்பு, 25 சதவீதம் என்ற அளவில் உள்ளது.பொறியியல் சாதன ஏற்றுமதி சூடுபிடித்ததன் பயனாக, சென்ற செப்டம்பரில், ஒட்டுமொத்த ஏற்றுமதி, 2.73 சதவீதம் உயர்ந்து, 2,890 கோடி டாலரை எட்டியது.
நடப்பு நிதியாண்டில், ஈரான், துருக்கி, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான இந்திய பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் உள்ளது.இந்திய பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியாகும், முதல் 25 நாடுகளின் பட்டியலில், தெற்காசியாவைச் சேர்ந்த மூன்று நாடுகள் இடம்பெற்றுள்ளன என, பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இ.இ.பி.சி.,) தெரிவித்துள்ளது.
வர்த்தக கொள்கைநடப்பு 2014–15ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், ஒட்டுமொத்த பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதி, 3,500 கோடி டாலரை (2.10 லட்சம் கோடி ரூபாய்) எட்டியுள்ளது. சென்ற செப்டம்பரில், பொறியியல் சாதனங்கள் தவிர, அரிசி (17.7 சதவீதம்), காபி (13.39 சதவீதம்), கடல் உணவுப் பொருட்கள் (13.3 சதவீதம்), மைக்கா, நிலக்கரி, இதர தாதுக்கள் (7.88 சதவீதம்), தோல் பொருட்கள் (13.72 சதவீதம்), ஜவுளி (16 சதவீதம்) உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளன.
பொறியியல் சாதன துறை ஏற்றுமதியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், நிதி மற்றும் நிதி சாரா சலுகை திட்டங்களை, மத்திய அரசு, புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|