பதிவு செய்த நாள்
01 நவ2014
03:59

சென்னை: நேற்று, ஆபரண தங்கம் விலை அதிரடியாக, சவரனுக்கு, 472 ரூபாய் குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,522 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,176 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 26,970 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 59 ரூபாய் குறைந்து, 2,463 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு, 472 ரூபாய் சரிவடைந்து, 19,704 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம், 630 ரூபாய் குறைந்து, 26,340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன், 28ம் தேதி, ஒரு கிராம் தங்கம், 2,379 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,032 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின், தற்போது ஒரு சவரன் தங்கம், 19 ஆயிரம் ரூபாயை ஒட்டி உள்ளது. நடப்பாண்டில், செப்., 22ம் தேதி, காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம், 2,499 ரூபாய்க்கும், ஒரு சவரன், 19,992 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று, ஒரு கிராம் வெள்ளி, 38.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 35,695 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதில், பங்கு சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். மேலும், அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பும் உயர்ந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், தங்கம் விலை குறைந்துள்ளது. அடுத்த வாரம் வரை, தங்கம் விலை குறைவாகவே இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|