பதிவு செய்த நாள்
01 நவ2014
04:06

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று, காளையின் ஆதிக்கத்தில் கட்டுண்டது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் பல முன்னணி நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சந்தை மதிப்பீட்டை காட்டிலும் சிறப்பாக இருந்தது போன்றவற்றால், பங்கு சந்தைகளில் வர்த்தகம் களைகட்டியது.
அன்னிய நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வருவதையடுத்து, நேற்றைய வர்த்தகத்தில் ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ தலா, 1.85 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து புதிய சிகரத்தை எட்டின.முதன்முறையாக, வெறும் ஐந்து மணி நேர வர்த்தகத்தில், ‘நிப்டி’, குறியீட்டு எண் 100 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 8,200லிருந்து, 8,300ஆக உயர்ந்தது.நேற்றைய வர்த்தகத்தில், நுகர்வோர் சாதனங்கள் தவிர்த்து, இதர துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.குறிப்பாக, பொறியியல் துறை குறியீட்டு எண், 2.66 சதவீதம் அதிகரித்தது. அதேசமயம், நுகர்வோர் சாதன துறை குறியீட்டு எண், 3.18 சதவீதம் சரிவை கண்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், நேற்று ஒரே நாளில், 519.50 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 27,865.83 புள்ளிகளில் நிலைகொண்டது.
‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், எச்.டி.எப்.சி., கெயில், எல் அண்டு டி உள்ளிட்ட 29 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்கின் விலை மட்டும் சரிவடைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 153 புள்ளிகள் உயர்ந்து, 8,322.20 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|