பதிவு செய்த நாள்
03 நவ2014
00:02

வர்த்தக சிலிண்டர் விலை, 17 ரூபாய் குறைந்தது.பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு (14.20 கிலோ), வர்த்தக பயன்பாடு (19 கிலோ) என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கின்றன.
இந்நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதம்தோறும், வர்த்தக சிலிண்டர், மானியம் அல்லாத சிலிண்டர் விலையில், மாற்றம் செய்கின்றன. அதன்படி, தற்போது, வர்த்தக சிலிண்டர் விலை, 17 ரூபாய் குறைந்து, 1,665 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை, டில்லி, 1,449 ரூபாய்; கோல்கட்டா, 1,532 ரூபாய்; மும்பை, 1,540 ரூபாய் என்றளவில் உள்ளது.சென்னையில், மானிய விலை வீட்டு சிலிண்டர், 404.50 ரூபாய்க்கும், மானியம் அல்லாத சிலிண்டர், 863.50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|