பதிவு செய்த நாள்
03 நவ2014
00:12

கவுகாத்தி:வரும், 2018ம் ஆண்டிற்குள், இந்தியாவில், ஆன்–லைன் சில்லரை வர்த்தக சந்தை மதிப்பு, 4 மடங்கு வளர்ச்சி கண்டு, 88 ஆயிரம் கோடி ரூபாயை (1,450 கோடி டாலர்) தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது, தற்போது, 21 ஆயிரம் கோடி ரூபாய் (350 கோடி டாலர்) என்ற அளவில் உள்ளது என, முன்னணி ஆய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
ஆன்–லைன் சந்தையின் மொத்த ஆண்டு வளர்ச்சி விகிதம், 2014–18ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், 40–45 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட டிஜிட்டல் புரட்சியின் விளைவாக, ஆன்–லைன் வர்த்தக சந்தை சிறப்பான மற்றும் நிலையான வளர்ச்சி கண்டு வருகிறது. கிராமங்கள், நகரங்களில் அதிகரித்து வரும் ஸ்மார்ட் போன் விற்பனை மற்றும் இணையதள பயன்பாடு, பொருட்களை எளிதாக தேர்ந்தெடுத்து வாங்க துணை புரிகிறது. இதனால், நேரம், அலைச்சல், செலவு ஆகியவை மிச்சமாகின்றன.
இதற்கு வலுவூட்டும் விதமாக, ஆன்–லைன் வர்த்தக நிறுவனங்களும், வாடிக்கையாளர்களை அதிகளவில் கவரும் வகையில், அவ்வப்போது அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்து விற்பனையை அதிகரித்து வருகின்றன. இது போன்றவற்றால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள், ஆன்–லைன் வர்த்தக சந்தை, 88 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என, அந்த ஆய்வு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|