பதிவு செய்த நாள்
03 நவ2014
17:23

மும்பை : வாரத்தின் துவக்கநாளில் புதிய உச்சத்துடன் துவங்கிய பங்குசந்தை, இறுதியில் ஏற்ற - இறக்கத்துடன் முடிந்தது. கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு லாபம் உயர்ந்துள்ளது, முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கியது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் தொடங்கின. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் லாபநோக்கோடு பங்குகளை விற்பனை செய்ததால் இறுதியில் சென்செக்ஸ் சிறிது சரிந்தும், நிப்டி சிறிது உயர்ந்தும் முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 5.45 புள்ளிகள் சரிந்து 27,860.38-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 1.95 புள்ளிகள் உயர்ந்து 8,324.15-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 18 நிறுவன பங்குகள் சரிந்தும், 12 நிறுவன பங்குகள் உயர்ந்தும் முடிந்தன. குறிப்பாக கெயில், ஐடிசி., என்டிபிசி., ஓஎன்ஜிசி., பெல், மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, மகிந்திரா அண்ட் மகிந்திரா டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|