பதிவு செய்த நாள்
11 நவ2014
05:09

புதுடில்லி :கடந்த அக்டோபரில், இந்திய நிறுவனங்கள், கடன்பத்திர ஒதுக்கீடு மூலம் திரட்டிய தொகை, 34 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 38,399 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தெரிவித்துள்ளது.இது, முந்தைய செப்டம்பர் மாதத்தில், 58,578 கோடி ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.இதே போன்று, கடன்பத்திர ஒதுக்கீடுகளின் எண்ணிக்கையும், 312லிருந்து, 279 ஆக குறைந்துள்ளது.தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு என்பது, நிறுவனங்கள் தங்களது மூலதன தேவைகளுக்காக, நிறுவன முதலீட்டாளர்களுக்கு, கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டி கொள்வதாகும்.
பங்குச் சந்தை நிலவரம் நன்கு உள்ளதையடுத்து, நிறுவனங்கள் இவ்வகை வெளியீட்டின் மூலம் நிதி திரட்டி கொள்வது குறைந்து போயுள்ளது.மேலும், புதிய பங்கு வெளியீடு, உரிமை பங்கு வெளியீட்டில், நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதும், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடுகளுக்கு மவுசு குறைந்ததற்கு மற்றொரு முக்கிய காரணம்.நடப்பு நிதியாண்டில் இதுவரையில், தனிப்பட்ட கடன்பத்திர ஒதுக்கீடு மூலம், நிறுவனங்கள் திரட்டிய தொகை, 1.84 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது, கடந்த, 2013–14ம் முழு நிதியாண்டில், 2.76 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, ‘செபி’ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|