பதிவு செய்த நாள்
19 நவ2014
00:00

மும்பை:புதிய உச்சத்தை கண்ட பங்கு சந்தைகள், நேற்று திடீரென சரிவை கண்டன.வர்த்தகத்தின் இடையில், முன் எப்போதும் இல்லாத வகையில், ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 28,283 மற்றும் 8,450 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்திருந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதால், பங்கு சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தன.
நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், எண்ணெய்–எரிவாயு துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.அதேசமயம், பொறியியல், அடிப்படை கட்டமைப்பு, மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த குறியீட்டு எண் முறையே, 1.61 சதவீதம், 1.48 சதவீதம், 1.33 சதவீதம் உயர்ந்திருந்தன.ஐரோப்பிய சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 14.59 புள்ளிகள் சரிவடைந்து, 28,163.29 புள்ளிகளில் நிலைபெற்றது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சன்பார்மா, ஹிண்டால்கோ உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், பெல், எல் அண்ட் டி, மகிந்திரா உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 4.85 புள்ளிகள் குறைந்து, 8,425.90 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|