பதிவு செய்த நாள்
27 நவ2014
14:53

இப்போது வடகிழக்கு பருவமழை காலம். சொந்தமாக கார் வைத்து இருப்பவர்கள், மழையில் நனையாமல், காரில் பயணம் செய்வதே சுகம் என நினைப்பார்கள். அதே நேரத்தில், மழை நீரில், சாலையில் செல்லும் போது கார் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு இருக்க வேண்டியது மிக அவசியம்.
சில அரிய ‘டிப்ஸ்’கள்:
* மழைக்காலம் என்றாலே, சாலை பராமரிப்பு காணாமல் போய்விடும். குண்டும் குழியுமான சாலைகள்தான், பெரும்பாலும் காணப்படும். எனவே, இந்த சாலைகளில் செல்ல, காரின் டயர்கள் சரியாக இருக்க வேண்டும். குறைந்த அளவு தேய்மானம், சரியான அளவில் காற்று அழுத்தம், வழக்கி செல்லாத அளவுக்கு, சாலையில் பிடிப்புடன் செல்ல வேண்டும். அப்போது தான் பயணம் சுகமாக இருக்கும்.
* காரின் சஸ்பென்ஷன் சரியாக இருந்தால் தான், பள்ளம் மேடுகளில் பயணிக்கும் போது, கார் பயணிகளுக்கு பிரச்னை ஏற்படாது.இல்லாவிடில், துாக்கி துாக்கி போட்டு, மோசமான பயணமாக அமைந்து விடும்.
* காரின் நான்கு சக்கரங்களுக்கும், சரிவிகிதத்தில், பிரேக் பிடிக்க வேண்டும். அப்போது தான், கார் இழுத்து கொண்டு செல்லாது. மழைக்காலத்தில், கார் பிரேக் பேடுகள் சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
* காரின் முன்பக்க கண்ணாடியில், வைப்பர் சரியாக பொருத்தப் பட்டுள்ளதா, செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
* காரின் முன்பக்க கண்ணாடியில், விரிசல் விட்டு இருந்தால், பாதையை சரியாக பார்க்க முடியாது. அதே போல், பிற வாகனங்கள் வெளியிடும் புகையால், காரின் முன்பக்க கண்ணாடி யில், எண்ணெய் பிசுபிசுப்பு போன்ற ஒரு படலம் படர்ந்து இருக்கும். அதை, டிடர்ஜென்ட் பவுடரை தண்ணீரில் கலந்து, அதை கொண்டு, கார் கண்ணாடியை நன்கு துடைக்க வேண்டும்.
* காரின் முகப்பு விளக்குகள், பின்பக்க விளக்குகள் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.
* மழைநீரில் செல்லும் போது, காருக்குள் தண்ணீர் வந்து விடாமல், பார்த்துகொள்ள வேண்டும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|