பதிவு செய்த நாள்
27 நவ2014
14:54

இந்தியாவில், 100 சிசி திறன் கொண்ட பைக்குகளுக்கு தான், தேவை அதிகம். ஆனால், உலக நாடுகளில், அதிக திறன் கொண்ட சொகுசு பைக்குகள், நீண்ட தூரம் அலுக்காமல் செல்லும் அளவுக்கு வசதிகள் நிறைந்த பைக்குகள் மீது ஆர்வம் காட்டுகின்றனர். ‘டூரர் பைக்’ என்று அழைக்கப்படும் இவ்வகை பைக்குகள், தற்போது இந்தியாவிலும் வலம் வர துவங்கி உள்ளன. அந்த வகையில், ஜப்பானைச் சேர்ந்த கவாசாக்கி நிறுவனம், இந்தியாவில், ‘வெர்சைஸ் 1000’ என்ற சொகுசு பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. எல்லா வகை சாலைகளிலும் செல்லும் திறன் படைத்த பைக் இது. இதற்கான முன்பதிவு துவங்கி உள்ளது. 6 லட்சம் ரூபாய் செலுத்தி, முன்பதிவு செய்ய வேண்டும்.
சிறப்பு அம்சங்கள்:
* இதில், 1043 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
* சக்தி 122ps.
* டர்க் 120Nm
* 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வசதி கொண்டது.
* கரடுமுரடு பாதை, வழுக்கும் பாதை, மண் பாதை என எந்த பாதையிலும் சிறப்பாக செல்லும் திறன் படைத்தது.
* இந்த பைக்கில், 3மோட் கவாசக்கி டிராக் ஷன் சிஸ்டம் என்ற வசதி உள்ளது. முதல் இரண்டு வகைகளில், பைக்கை வேகமாக செலுத்தும் போது, சொகுசாக பயணிக்கும் வகையில் வசதி உள்ளது. வழுக்கும் பாதையில் செல்லும் போது, பின்பக்க சக்கரத்தின் சுழற்சியை கட்டுப்படுத்தி, வாகனத்தை பிடிப்புடன் செல்லும் வகையில் மூன்றாவது வகை வசதி உள்ளது.
* ஒரு மாதத்தில், கவாசாக்கி நிறுவனம் அறிமுகப்படுத்தும் மூன்றாவது பைக் இது. இதற்கு முன், இசட்250, இஆர்6என் ஆகிய மாடல் பைக்குகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
* வெளிநாட்டில் முழுமையாக உற்பத்தி செய்து, முழு பைக்காக, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் விலை, 12 லட்சம் ரூபாயில் இருந்து,15 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|