பதிவு செய்த நாள்
02 டிச2014
00:26
வர்த்தக சிலிண்டர் விலை, 200 ரூபாய் குறைந்தது.பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; வர்த்தக பயன்பாட்டுக்கு, 19 கிலோ என, இரண்டு வகை சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும், வர்த்தக பயன்பாடு மற்றும் மானியம் அல்லாத சிலிண்டர் விலையில், மாற்றம் செய்யப்படுகிறது.அதன்படி, தற்போது, வர்த்தக சிலிண்டர் விலை, 200 ரூபாய் குறைந்து, 1,465 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் விலை: டில்லி 1,267 ரூபாய் கோல்கட்டா 1,348 ரூபாய் மும்பை 1,344 ரூபாய் என்றளவில் உள்ளது.சென்னையில், மானியம் அல்லாத சிலிண்டர், 749.50 ரூபாய்; மானிய சிலிண்டர், 404.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|