ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.89ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.89 ... தங்கம் விலை ரூ.96 குறைந்தது தங்கம் விலை ரூ.96 குறைந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
புது பென்ஸ் காருக்கு மவுசு அதிகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2014
10:50

இந்தியாவில், சமீபத்தில், அறிமுகம் செய்யப்பட்ட, மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தின், ‘ஜிஎல்ஏ கிளாஸ்’ காருக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்த காருக்கான காத்திருப்பு காலம், மூன்று மாதங்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த, மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், எஸ்.யு.வி., கார் பிரிவில், ஜிஎல்ஏ கிளாஸ் காரை, செப்டம்பர் இறுதியில், இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பெட்ரோல் மற்றம் டீசல் என, இரண்டு வகைகளிலும், இந்த கார் கிடைக்கிறது.
இதில், டீசல் காரில் இரண்டு வேரியன்ட்கள்; பெட்ரோல் காரில் ஒரு வேரியன்ட் என கிடைக்கிறது. டீசல் காரின் விலை, 32.75 லட்சம் ரூபாய், 36.9 லட்சம் ரூபாய். பெட்ரோல் காரின் விலை, 36 லட்சம் ரூபாய். இது, எக்ஸ்ஷோரூம், டில்லி விலை. தமிழகத்தில் விலை மாறுபடும்.
இந்த காரின் சிறப்பு அம்சங்கள்:
* ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம்
* டயர் அழுத்தம் கண்காணிக்கும் அமைப்பு
* டிரைவர் சீட்டை தேவைக்கு ஏற்ப அமைத்து கொள்ள, மெமரியுடன் கூடிய அமைப்பு.
* தானாகவே சரி செய்து கொள்ளும் ரியர் வியூ கண்ணாடி.
* ரிவர்ஸ் கேமரா, சன் ரூப் வசதி என பல அம்சங்கள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன.
* டீசல் காரில், 2.2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு காமன் ரயில் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு டபுள் கி.ௌச் கியர் கொண்டது. ஒரு லிட்டருக்கு, 17.9 கி.மீ., மைலேஜ் தரும்.
* பெட்ரோல் காரில், 2.0 லிட்டர் 4 சிலிண்டர் டர்போர் சார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பொருத்தப்பட்டது. ஒரு லிட்டருக்கு, 13.8 கி.மீ., மைலேஜ் தரும்.
இந்த கார், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வௌிநாட்டில் முழுமையாக உற்பத்தியாகி, இறக்குமதி செய்யப்படுகிறது. ஏற்கனவே, இந்த காருக்கு, 600 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். அவர்களுக்கு கார் வழங்கப்பட்டு விட்டது. புதிதாக, பதிவு செய்தவர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு பிறகு தான் கார் கிடைக்கும் என்ற சூழ்நிலை காணப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)