பதிவு செய்த நாள்
05 டிச2014
00:44

தேனி:தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வெளிநாடுகளுக்கு சிறுதானியங்கள் ஏற்றுமதியாவதால் விளைச்சல் அதிகரித்துள்ளபோதும் தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு பின் நடப்பு ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. இதனால் மானாவாரி சிறுதானியங்களின் விளைச்சல் தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில் அதிகரித்து உள்ளது. விளைச்சல் அதிகரிப்பால் விலை குறையும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சிறுதானியங்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் விலை குறையவில்லை.
கம்பு, தினை, வரகு, குதிரைவாலி, ராகி, சாமை போன்ற சிறுதானியங்கள் அதிகளவில் பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், பூடான், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. இதனால் உள்ளூர் மார்க்கெட்டில் பற்றாக்குறை ஏற்பட்டு விலைஉயர்ந்துள்ளது.
தற்போதைய நிலையில் ஒரு கிலோ கம்பு ரூ. 16, தினை ரூ.51, வரகு ரூ.45 முதல் 53 வரையும், குதிரைவாலி ரூ.63, சாமை ரூ. 53 முதல் 60 வரையும், ராகி ரூ.20 என விற்கப்படுகிறது. மக்காச்சோளம் கிலோ ரூ.13 விற்கப்படுகிறது.தேனி வியாபாரி சீனிவாசன் கூறியதாவது:
மழையால் கர்நாடகாவிலும், தமிழகத்தில் பெரம்பலுார், விழுப்புரம், மதுரை, தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் சிறுதானியங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது ஏற்றுமதி அதிகம் உள்ளதால் விலை குறையவில்லை. வரும் ஜனவரியில் சிறுதானியங்கள் அறுவடை மும்முரமாக இருக்கும். அப்போது மார்க்கெட்டிற்கு வரத்தும் அதிகம் இருக்கும். உள்நாட்டில் சிறுதானியங்களை அதிகம் பயன்படுத்துவது போல், வெளிநாடுகளிலும் அதிகம் பயன்படுத்த தொடங்கி விட்டனர். இதனால் விலைகள் பெரியஅளவில் குறைய வாய்ப்புகள் இல்லை, என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|