பதிவு செய்த நாள்
11 டிச2014
16:17

மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 229 புள்ளிகள் சரிந்து 27,602.01 புள்ளிகளாகவும், நிப்டி 62.75 புள்ளிகள் சரிந்து 8292.90 புள்ளிகளாகவும் இருந்தன.
அக்டோபர் மாத தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளி விபர அறிக்கையையும், பணவீக்கம் தொடர்பான வறி்பனை விலை பட்டியலையும் அரசு நாளை வெளியிட உள்ளது. இதன் காரணமாகவும், சர்வதேச நாணய மாற்று சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாலும் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கி, சரிவுடனேயே முடிவடைந்துள்ளன.
எண்ணெய் நிறுவன மற்றும் எரிபொருள் துறை நிறுவன பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. ஐடி மற்றும் கட்டுமானத்துறை பங்குகளும் சரிவுடனேயே காணப்படுகின்றன. சர்வதே சந்தையில் ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியாகவே இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|