பதிவு செய்த நாள்
12 டிச2014
13:54

இருசக்கர வாகனங்களுக்காக, டியூப்லெஸ் டயர்கள் உண்டு. நடுவழியில் பஞ்சராகி, சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்களுக்கு, டயூப்லெஸ் டயர்கள் மிகவும் உதவிகரமாக உள்ளன.இந்த சூழ்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த, ‘மிச்சிலின்’ என்ற டயர் நிறுவனம், நான்கு சக்கர வாகனங்களுக்காக, ‘டூவீல்’ என்ற டயரை கண்டுபிடித்துள்ளது.
இந்த டயரின் முக்கிய அம்சங்கள்:
l பொதுவாக, நான்கு சக்கர வாகனத்தின் சக்கரம் என்பது, டயர், டியூப், ஸ்போக்ஸ், ரீம் என்ற அம்சங்கள் உண்டு. டியூபில் காற்றை நிரம்பிய பிறகே, வாகனத்தை இயக்க முடியும். டயரில், ஆணி அல்லது கூரான பொருள் குத்தினால், டயூபில் காற்று இறங்கி பஞ்சர் பிரச்னை ஏற்படும்.l ஆனால், இந்த டயரில், காற்று அடிக்கவேண்டிய, டயூப் இருக்காது. அத்துடன், டயர், ஸ்போக்ஸ், ரீம் போன்றவை தனித்தனியாக இருக்காமல், ஒரே பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது.l ‘டூவீல்’ வளையும் தன்மை கொண்டது. எனவே, கரடு முரடான பாதைகளில் செல்லும் போதோ, ஸ்பீடு பிரேக்கர், பள்ளம் ஆகியவற்றை கடக்கும் போதோ, கார், அவற்றில் ஏறி, இறங்கும் போது, அதற்கு ஏற்றார்போல், டயரும் நெளிந்து கொடுக்கும்.l அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில், கிரீன்விலி என்ற இடத்தில், 300 கோடி ரூபாய் செலவில், ‘டூவீல்’ டயர் தயாரி ப்பு தொழிற்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில், கனரக வாகனங்களுக்கான, ‘டூவீல்’ டயர் உற்பத்தி செய்யப்படும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|