பதிவு செய்த நாள்
12 டிச2014
13:55

ஆய்வில் தெரிய வந்த தகவல் :இந்தியாவில், சந்தை செயல்பாடு குறித்து, ஜெ.டி.பவர் ஆசிய பசிபிக் என்ற நிறுவனம் ஆண்டுதோறும், ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை ெவளியிடும். இதுவரை, 18 ஆண்டுகளாக,இந்த முடிவுகள் ெவளியிடப்பட்டுள்ளன.நடப்பு ஆண்டுக்கான ஆய்வு முடிவுகள் சமீபத்தில் ெவளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது: இந்தியாவில், டீசல் கார்கள் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு நடத்தப்பட்டது. இதற்காக, கடந்த ஆண்டு, நவம்பர் முதல், நடப்பு ஆண்டு, ஜூலை வரை, புதிதாக டீசல் கார்கள் வாங்கிய, 8,429 பேரிடம், கேள்வி பட்டியல் கொடுத்து, பதில்கள் பெறப்பட்டன.டீசல் கார்களில், பொதுவாக காணப்படும், 200 பிரச்னைகளில், அவர்கள் கார் வாங்கிய, இரண்டு முதல், ஆறு மாதங்களுக்குள், எந்தெந்த பிரச்னை ஏற்பட்டது என்பது குறித்து, தகவல் திரட்டப்பட்டது.l காரின் வெளிப்புறம் பிரச்னைl காரை ஓட்டும் போதும் ஏற்படும் அனுபவம்l காரில் உள்ள சிறப்பு அம்சங்களில் காணப்படும் பிரச்னைகள்l இருக்கை வசதிl ஆடியோ சிஸ்டம் செயல்பாடுl ஏ.சி., செயல்பாடுl காரின் உட்புற வசதிl கியர் பயன்பாடுl இன்ஜின் செயல்பாடுஎன, பல்வேறு விஷயங்கள் குறித்து தகவல்கள் திரட்டப்பட்டன.கடந்த, 2010ல் நடத்தப்பட்ட ஆய்வில், 100 கார்களுக்கு, 148 பிரச்னைகள் என்ற விகிதத்தில், டீசல் கார்கள் செயல்பாடு இருந்தது. ஆனால், தற்போது நடத்தப்பட்ட ஆய்வில், இது, 100 கார்களுக்கு, 96 பிரச்னைகள் என்ற அளவில் குறைந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில், டீசல் கார்களின் செயல்பாடுகள் நன்கு முன்னேற்றம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|