பதிவு செய்த நாள்
26 டிச2014
04:48

கடந்த நிதியாண்டு தமிழகத்தல், 3.27 லட்சம் எக்டேரில் கரும்பு சாகுபடி செய்து, 12.80 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தியானது.
இந்த ஆண்டு மழை அதிகரித்துள்ளதால், 4 லட்சம் எக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது. இதன்மூலம், 22 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரை உற்பத்தியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வட மாநிலங்களிலும் உற்பத்தி அதிகரித்துள்ளதால், உத்தரபிரதேசத்தில் இருந்து, தமிழகத்துக்கு, சர்க்கரை வரத்து அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மொத்த விலையில் குவிண்டாலுக்கு, 200 ரூபாய் வரை சரிவு ஏற்பட்டது. குவிண்டால், 3,240 ரூபாயாக இருந்தது, 3,100 ரூபாயாக குறைந்துள்ளது. சில்லரை விலை, கிலோ, 36 ரூபாயிலிருந்து, 34 ரூபாயாக குறைந்துள்ளது.நாட்டுச் சர்க்கரை குவிண்டால், 3,150 ரூபாயிலிருந்து, 2,950 ரூபாயாக குறைந்துள்ளது. சில்லரை விலையில், கிலோவுக்கு, இரண்டு ரூபாய் வரை குறைந்துள்ளது.
– நமது நிருபர்-–
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|