பதிவு செய்த நாள்
28 டிச2014
10:52

கடந்த 7, டிசம்பர், 2014 அன்று அகில இந்திய பொருளாதார கணக்கெடுப்பு விருது வழங்கும் அமைப்பு (AIESAC, New Delhi) விருது வழங்கும் விழாவை நடத்தியது.
சர்வதேச சந்தையில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை தேர்ந்தெடுத்து கவுரவிக்கவும் மற்றும் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையிலும் மேற்படி நிகழ்வு அமைந்தது. இவ்விழாவில், சிறந்த திட்டமிடல் மற்றும் செயலாக்கம், பகிர்வுக் கோட்பாடு, வாடிக்கையாளர் சேவை மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என பல்வேறு தலைப்புகளில் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகம் சார்ந்த கட்டுமான நிறுவனங்களில், முதன்முதலாக இரண்டு விருதுகளை பெற்று தமிழகத்தி்ற்கு இந்நிறுவனம் பெருமை தேடித்தந்துள்ளது. அதன்படி "சூப்பர் குவாலிட்டி கிரவுன் அவார்டு மற்றும் சர்ட்டிபிகேட் ஆப் குவாலிட்டி அசூரன்ஸ்" என்ற விருதுகளை அமர்பிரகாஷ் டெவலப்பர்ஸ் பிரைவேட் நிறுவனத்தின் தலைவர் திரு.சுதிர்குமார் சுராணா அவர்கள், புது தில்லியில் நடந்த விழாவில் பெற்றுக்கொண்டார். மேற்படி விருதுகளை பெற்ற பின்னர் அவர் கூறியதாவது, "இந்த விருதானது எங்களின் தரம் மற்றும் சேவையை மென்மேலும் மேம்படுத்துவதற்கான ஓர் உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற மேலும் பல விருதுகளை பெறுவதற்கான ஓர் மைல்கல்லாகவும் விளங்குகிறது எனவும், சிறந்த குடியிருப்பு கட்டுமானம்தான் எங்களின் முதல்நோக்கம் ஆகும்" என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|