பதிவு செய்த நாள்
28 டிச2014
17:12

இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் போது தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளலாம்.கார், வேன் ஓட்டுபவர்கள் தரம் வாய்ந்த பெல்ட்களை அணிந்து கொள்ள வேண்டும். நல்ல மனநிலை மற்றும் உடல்நிலை இருக்கும்போது மட்டுமே வாகனத்தை ஓட்ட முன்வர வேண்டும். குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். உடல் சோர்வாக இருக்கும்போது வாகனத்தை ஓட்டக்கூடாது. வாகனத்தை இயக்குவதற்கு முன், வாகனம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஓட்டவேண்டும். வாகனம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், பதிவுச்சான்று, காப்புச்சான்று ஆகியவை வாகனத்தில் இருக்க வேண்டும். வாகனத்தின் பதிவு எண், அந்த வாகனத்தின் முன்பும், பின்பும் தெளிவாக எழுதப்பட்டுள்ளதா என்பதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். வாகனத்தின் டயர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சாலையில் வழுக்கிச் செல்லாமல் இருக்க டயர்களில் உள்ள பட்டன்கள் சரியாக இருக்க வேண்டும். டயர்களில் சரியான அளவு காற்று இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.சரியான அளவு காற்று நிரப்பப்பட்ட கூடுதல் டயர் ஒன்றை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்ஜின் ஆயில், பிரேக் ஆயில் சரியான அளவு உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ள வேண்டும். அதேப்போன்று ஒலிப்பான்களையும் சரிபார்க்க வேண்டும். அனைத்து விளக்குகளும் சரியாக எரிகிறதா என்பதையும் ஒருமுறை பார்த்துக் கொள்ள வேண்டும். சின்ன சின்ன விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் எல்லாவற்றையும் உறுதிசெய்து கொண்டு வாகனங்களை இயக்கினால், அது நமக்கும் மட்டுமல்லாமல் ரோட்டில் செல்லும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பான பயணமாக அமையும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|