பதிவு செய்த நாள்
28 டிச2014
17:13

அன்றாடம் நமது செலவுகளில், குறிப்பிட்ட அளவு தொகை நமது வாகனங்களுக்கான எரிபொருளுக்கு செல்கிறது. இச்செலவை எப்படி குறைப்பது:வாகனங்களின் டயர்களில் சரியான அளவில் காற்று எப்போதும் இருக்க வேண்டும். அதிகப்படியான காற்று அல்லது குறைவான காற்று போன்ற காரணங்களால் மைலேஜ் கிடைக்காது; டயர்களை பாதிக்கும்.புதிய டயர்கள் மாற்றும் போது வாகன தயாரிப்பாளர் பரிந்துரைத்த டயர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.காலை நேரங்களில் மட்டும் எரிபொருளை நிரப்ப முயற்சியுங்கள். எரிபொருளின், ‘ஸ்பெசிபிக் க்ராவிட்டி’ காலை நேரங்களில் அதிகமாக இருக்கும்.எரிபொருள் டேங்கில் முழுவதும் எரிபொருள் நிரப்ப வேண்டாம்.வாகனத்தின் பராமரிப்பு மிகவும் அவசியம். சரியான கால இடைவெளியில் பராமரித்தால் தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம். வாகனத்தின் செயல்திறனும் சிறப்பாக இருக்கும்.எக்காரணம் கொண்டும் தயாரிப்பாளர் பரிந்துரைக்காத எரிபொருள், இன்ஜின் ஆயில் பயன்படுத்தாதீர்கள்.வாகனத்தை இயக்கும் போது தேவையான அளவே அக்சிலேட்டர் கொடுங்கள். திடீரென அதிகப்படியான அக்சிலேட்டர் கொடுப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. பிரேக் பிடிப்பதில் கவனம் கொள்ளுங்கள். அக்சிலேட்டர் கொடுத்தவுடன் உடனடியாக பிரேக் கொடுக்காதீர்.அதிவேகம் மிகுந்த ஆபத்தானவை. அதேபோல எரிபொருளும் அதிகம் தேவைப்படும். டாப் கியரிலும் மெதுவாக செல்வது எரிபொருளை சேமிக்க உதவும். சராசரியாக 50 முதல் -60 கி.மீ., வேகத்தில் பயணிக்க முயலுங்கள்.இரண்டு நிமிடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தால் வாகனத்தை அணைத்து விடுங்கள்.கிளட்ச் மீது கியர் மாற்றும் போது மட்டுமே காலை பயன்படுத்தவும். இவ்வாறு செய்தால் எரிபொருளை மிச்சப்படுத்தலாம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|