பதிவு செய்த நாள்
29 டிச2014
03:52

புதுடில்லி:‘அடுத்தாண்டில், நம் நாட்டில் இணையம் மூலமாக பொருட்களை வாங்குவதற்காக செலவிடப்படும் தொகை அதிகரிக்கும்’ என, இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு, ‘அசொசெம்’ தெரிவித்துள்ளது.இணைய வர்த்தகம் தொடர்பாக ‘அசொசெம்’ அறிக்கை: நம் நாட்டில், இணையம் மூலமாக பொருட்களை வாங்கும் நடைமுறை அதிகரித்துஉள்ளது. இந்தாண்டில், நான்கு கோடி பேர், இணையம் மூலமாக ஏதாவது ஒரு பொருட்களை வாங்கியுள்ளனர். இதற்காக, ஒவ்வொருவரும், சராசரியாக, 6,000 ரூபாய் செலவிட்டுள்ளனர்.அடுத்தாண்டில், இந்த செலவு அதிகரிக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள், 6.5 கோடி பேர், இணையம் மூலமாக பொருட்களை வாங்குவர் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொருவரும், 10 ஆயிரம் ரூபாய் செலவிட வாய்ப்புள்ளது.மொபைல் போன், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தான், இணையம் மூலமாக அதிகம் விற்பனையாகின்றன. இணையம் மூலமாக விற்பனையாகும் மொத்த பொருட்களில், மொபைல் போனின் பங்கு, தற்போது, 11 சதவீதமாக உள்ளது. அடுத்தாண்டில், இது, 25 சதவீதமாக அதிகரிக்கும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|