பதிவு செய்த நாள்
29 டிச2014
03:54

கவுகாத்தி:உலகளவில், கென்யாவை அடுத்து, ஊட்டச்சத்துள்ள ஊதா தேயிலை உற்பத்திக்கான சாதகமான அம்சங்கள் அனைத்தும், அசாமில் உள்ளது என, அம்மாநிலத்தில் உள்ள டொக்லாய் தேயிலை ஆராய்ச்சி மைய மூத்த விஞ்ஞானி, பிரதீப் பரூவா தெரிவித்து உள்ளார்.அவர், மேலும் கூறியதாவது:கருந்தேயிலையை விட, மூன்று அல்லது நான்கு மடங்கு விலையுள்ள ஊதா தேயிலையை, கென்யா மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது.இந்த உடல் ஆரோக்கியத்திற்கான ஊதா தேயிலைக்கு, வருங்காலத்தில், சிறப்பான வர்த்தக வாய்ப்பு காத்திருக்கிறது. முதன் முதலில், அசாமில் தான், இந்த தேயிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து கென்யா சென்ற ஆங்கிலேய தாவரவியல் ஆய்வாளர்கள், தாங்கள் கொண்டு சென்ற ஊதா தேயிலை விதைகளை, அங்கு பயிரிட்டனர். இந்த வகையில், அசாம் ஊதா தேயிலை விதைகள், கென்யாவில், 1903ல் முதன் முதலாக துளிர்விடத் துவங்கின. இன்று, கென்யா, ஊதா தேயிலை உற்பத்தியில், தன்னிகரற்ற ஒரே நாடு என்ற சிறப்புடன் திகழ்கிறது. இந்நாட்டின் தேயிலை ஆராய்ச்சி அமைப்பு, இதுவரை, ஊதா தேயிலையின் 51 படிவாக்க விதைகளை வெளியிட்டு உள்ளது. அவற்றில், 41,அசாம் விதைகள் ஆகும்.இன்றும், அசாமின் கர்பி அனலாங் மற்றும் கச்சார் மாவட்டத்தில் உள்ள பரக் பள்ளத்தாக்கின் புதர் பகுதிகளில், ஊதா தேயிலை செடிகள், மண்ணோடு மண்ணாக மக்கி, மறைந்து காணப்படுகின்றன. அவை வளர்வதற்கான மண்வளமும் அங்குள்ளது. ஊதா தேயிலை உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலம், வருங்காலத்தில், இத்துறை சார்ந்த வர்த்தகத்தில், இந்தியா தலைசிறந்து விளங்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆரோக்கியத்திற்கு...: புற்று நோயை தடுக்கவும், பார்வை திறனை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும், ஊதா தேயிலை உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. தேயிலை விவசாயத்தில் புழங்கும் சொலவடையில் அசாமிற்கும், கென்யாவிற்கும் அதிக ஒற்றுமை உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|