பதிவு செய்த நாள்
29 டிச2014
03:55

திண்டுக்கல்:ஆந்திராவில் இருந்து நார்த்தங்காய் வரத்து அதிகரித்துள்ளதால் திண்டுக்கல்லில் ஒரு கிலோ நார்த்தங்காய் ரூ.17 ஆக சரிந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, தாண்டிக்குடி, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் நார்த்தங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கள் திண்டுக்கல் சிறுமலைெஷட் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை ஊறுகாய், ஜூஸ் தேவைக்காக கேரள வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். தினமும் 5 டன் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மலை பகுதிகளில் விளைச்சல் அதிகரித்துள்ளதால் நேற்று 10 டன் வரை விற்பனைக்கு வந்தது. மேலும் ஆந்திராவில் இருந்து நார்த்தங்காய் அதிகளவில் வர துவங்கியுள்ளது.சில வாரங்களுக்கு முன் கிலோ ரூ.80 விற்பனை செய்யப்பட்ட காய்கள் ரூ.17 ஆக குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பெரும்பாறை விவசாயி ஓ.மகாராஜன் கூறுகையில், “சரியான நேரத்தில் மழை பெய்ததால் காய்களின் வளர்ச்சியும், விளைச்சலும் அதிகரித்துள்ளது. மழைகாலம் என்பதால் தேவை குறைந்து விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் பறிக்கும் கூலிக்கு கூட கட்டுப்படியாகவில்லை,” என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|