பதிவு செய்த நாள்
09 ஜன2015
11:54

அட்லாண்டா : சர்வதேச அளவில் குளிர்பானங்கள் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள கோகோ கோலா நிறுவனம், 3 கோடி அமெரிக்க டாலர்களை மிச்சம் செய்வதற்காக, உலக அளவில், தனது நிறுவனங்களில் பணிபுரியும் 1800 ஊழியர்களை, பணியிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக, அந்நிறுவனம், இ-மெயிலின் மூலம் அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச அளவில், கோகோ கோலா விற்பனையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் கோகோ கோலா தயாரிப்பு விலையும் அதிகரித்துள்ளதன் காரணத்தினால், நிறுவனத்திற்கு சமீபகாலமாக, தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது.
அந்த அறிக்கையில், நிறுவன தலைமை உயர் அதிகாரி முஹ்தார் கென்ட் குறிப்பிட்டுள்ளதாவது, நிறுவனம், 3 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பை ஈடுகட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது. அதன் ஒருபகுதியே, 1600 முதல் 1800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பது ஆகும். இது சர்வதேச அளவில், தங்கள் நிறுவன்ததில் பணியாற்றும் மொத்த ஊழியர்களில் 1 சதவீத அளவே ஆகும். இந்த 1800 ஊழியர்களின் பணிநீக்கத்தினால், நிறுவனத்தின் பணிகள் சிறிதளவும் பாதிக்கப்படாது என்று கென்ட் அதில் குறிப்பிட்டுள்ளார்.
டிசம்பர் 31, 2013ம் தேதிப்படி, கோகோ கோலா நிறுவனத்திற்கு, சர்வதேச அளவில், 1,30,600 பேர், ஊழியர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|