பதிவு செய்த நாள்
13 ஜன2015
05:15

புதுடில்லி: காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளின் விலை ஏற்றத்தை தொடர்ந்து, நாட்டின் பண வீக்கம், 5 சதவீகமாக அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையை பொருத்து, ஒவ்வொரு மாதமும், பணவீக்கம் கணக்கிடப்படும். மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், நாட்டின் பண வீக்கம் அதிரடியாக குறைந்தது. டிச., 2013ல் 9.87 ஆக இருந்த பண வீக்க விகிதம், கடந்த ஆண்டு நவம்பரில், 4.38 ஆக குறைந்தது. இது, கடந்த சில ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவிலான பண வீக்க விகிதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காய்கறிகள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளின் அதிரடி விலை ஏற்றத்தால், கடந்த நவம்பரில், 4.38 ஆக இருந்த பண வீக்க விகிதம், கடந்த டிசம்பரில், 5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ரிசர்வ் வங்கி அடம்:'வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறி வரும் நிலையில், 'நீண்ட காலத்திற்கு நாட்டின் பண வீக்கம் குறைவாக பதிவானால் மட்டுமே வட்டி விகிதக் குறைப்பு பற்றி யோசிக்க முடியும்' என, ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த நவம்பரில், இதுவரை இல்லாத வகையில், நாட்டின் பணவீக்கம் 4.38 ஆக குறைந்ததை குறிப்பிட்டு, வங்கிகளின் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என, அமைச்சர் ஜெட்லி வலியுறுத்தினார். இந்நிலையில், டிசம்பருக்கான பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், வங்கிகளின் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கவர்னர் குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|