பெட்ரோல், டீசல் விலை குறைப்புபெட்ரோல், டீசல் விலை குறைப்பு ... இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
குறு­கிய கால கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தத்தில் மாற்­ற­மில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2015
06:34

மும்பை:ரிசர்வ் வங்கி, நேற்று வெளி­யிட்ட அதன் நிதி ஆய்வு கொள்­கையில், குறு­கிய கால கடன்­க­ளுக்­கான வட்டி விகி­தங்­களில், மாற்றம் எதையும் செய்­ய­வில்லை.
இதை­ய­டுத்து, ரிசர்வ் வங்கி குறு­கிய கால அடிப்­ப­டையில், வங்­கி­க­ளுக்கு வழங்கும் (ரெப்போ) கட­னுக்­கான வட்டி விகிதம், 7.75 சத­வீ­த­மா­கவும், அதேபோல், வங்­கி­க­ளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும் (ரிவர்ஸ் ரெப்போ) கட­னுக்­கான வட்டி விகிதம், 6.75 சத­வீ­த­மா­கவும் நீடிக்கும்.இதே போன்று, ரொக்க கையி­ருப்பு விகி­தத்­திலும் (சி.ஆர்.ஆர்.,), தற்­போ­துள்ள நிலையே (4 சத­வீதம்) தொடரும் என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.
கடந்த ஜன., 15ம் தேதி முதல், பண­வீக்­கத்தை குறைப்­ப­தற்­கான, எந்த போது­மான புதிய நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இதை கருத்தில் கொண்டே, குறு­கிய கால கடன் வட்டி விகி­தத்தில், மாற்றம் எதையும் மேற்­கொள்­ள­வில்லை என, ரிசர்வ் வங்­கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரி­வித்து உள்ளார்.
குறு­கிய கால கடன் வட்டி விகி­தங்­களில், மாற்றம் செய்­யப்­ப­டாத நிலையில், வங்­கி­களின் சட்­டப்­பூர்வ இருப்பு விகிதம் (எஸ்.எல்.ஆர்.,), 0.50 சத­வீதம் குறைக்­கப்­பட்டு, 22 சத­வீ­தத்­தி­லி­ருந்து, 21.50 சத­வீ­த­மாக நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. இது, வரும் 7ம் தேதி முதல், அம­லுக்கு வரும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
வங்­கிகள் திரட்டும் டிபா­சிட்டில், குறிப்­பிட்ட சத­வீ­தத்தை பத்­தி­ர­வ­டிவில், ரிசர்வ் வங்­கியில் இருப்பு வைக்க வேண்­டி­யது, கட்­டா­ய­மாக்­கப்­பட்டு உள்­ளது. இதுவே, எஸ்.எல்.ஆர்., என்று அழைக்­கப்­ப­டு­கி­றது.எஸ்.எல்.ஆர்., குறைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து, வங்­கிகள், உற்­பத்தி துறை சார்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு, அதி­க­ளவில் கடன் வழங்­கலாம் என, ரிசர்வ் வங்கி தெரி­வித்­துள்­ளது.
பங்கு சந்தை:ரிசர்வ் வங்கி, வட்டி விகி­தங்­களை குறைக்கும் என்ற நிலைப்­பாட்டால், நேற்று காலையில், பங்கு வர்த்­தகம் விறு­வி­றுப்­புடன் காணப்­பட்­டது. இந்­நி­லையில், வட்டி விகி­தங்­களில் தற்­போ­துள்ள நிலையே தொடரும் என்ற அறி­விப்பால், பங்கு சந்­தை­களில் வர்த்­தகம் சரிவை கண்­டது.குறிப்­பாக, வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த நிறு­வனப் பங்­குகள், மிகவும் குறைந்த விலைக்கு கைமா­றின. வங்கி துறையின் குறி­யீட்டு எண், 2.61 சத­வீ­தமும், ரியல் எஸ்டேட் துறையின் குறி­யீட்டு எண், 1.43 சத­வீ­தமும் வீழ்ச்சி கண்­டன.இதை­ய­டுத்து, மும்பை பங்குச் சந்­தையின் குறி­யீட்டு எண், கடந்த இரு வாரங்­களில் இல்­லாத அள­விற்கு, சரி­வுடன் முடி­வ­டைந்­தது.
ஏமாற்றம் அளிக்கிறது:ரிசர்வ் வங்கி, முக்­கிய கடன்­க­ளுக்­கான வட்­டியை குறைக்­கா­தது, ஏமாற்றம் அளிப்­ப­தாக உள்­ளது என, ரியல் எஸ்டேட் நிறு­வ­னங்­களின் கூட்­ட­மைப்­பான, ‘கிரெடாய்’ தெரி­வித்­துள்­ளது.பொரு­ளா­தார வளர்ச்­சியை ஊக்­கு­விக்க, வீடுகள் விற்­பனை அதி­க­ரிக்க, எதிர்­கா­லத்தில் வட்டி விகி­தங்கள் குறைக்­கப்­பட வேண்டும். இது­த­விர, வரி சீர்­தி­ருத்தம் உள்­ளிட்ட சில சலுகை திட்­டங்­களை வரும் பட்­ஜெட்டில் எதிர்­பார்த்து காத்­தி­ருப்­ப­தாக, ‘கிரெடாய்’ தெரி­வித்து உள்­ளது.

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)