பதிவு செய்த நாள்
10 பிப்2015
17:34

மும்பை : இந்திய பங்குசந்தைகள் கடந்த ஒருவாரம் சரிவை சந்தித்து வந்த நிலையில் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கிய போதிலும், டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வரலாற்று வெற்றி பெற்றதன் எதிரொலியாகவும், முக்கிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்வாலும் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 128.23 புள்ளிகள் உயர்ந்து 28,355.62–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 39.20 புள்ளிகள் உயர்ந்து 8,565.55–ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் நிறுவன பங்குகளில் 18 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 12 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 4 சதவீதம் உயர்வுடன் முடிந்தன. இவை தவிர்த்து ஐசிஐசிஐ., பங்குகள் 3 சதவீதம் உயர்வுடன் முடிந்தன. மேலும் டாடா ஸ்டீல், டாடா பவர், எச்டிஎப்சி., கெயில், கோல் இந்தியா, இன்போசிஸ், ஐடிசி., எஸ்பிஐ., பெல் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன. அதேசமயம் என்டிபிசி., ரிலையன்ஸ், ஓஎன்ஜிசி., சன்பார்மா போன்ற நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|