பதிவு செய்த நாள்
17 பிப்2015
00:44
புதுடில்லி:மொத்த விலை அடிப்படையிலான நாட்டின் பொது பணவீக்கம், கடந்த ஜனவரியில், மைனஸ் 0.39 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை கண்டுள்ளது. இது, கடந்த 5 ஆண்டுகளில் காணப்படாத சரிவாகும்.அதே நேரத்தில், கடந்த மூன்று மாதங்களில், இரண்டாவது முறையாக, பணவீக்கம் பின்னடைவைக் கண்டுள்ளது.
கடந்த ஜனவரியில், உணவுப் பொருட்கள் பணவீக்கம், ஆறு மாதங்களில் இல்லாத அளவு, 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும், தயாரிப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை சரிவால், ஒட்டுமொத்த பணவீக்கம் குறைந்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில், பூஜ்யமாக இருந்த மொத்த விலை பணவீக்கம், மறுமதிப்பீட்டில், மைனஸ் 0.17 சதவீதமாக பின்னடைவை கண்டுள்ளது. டிசம்பரில், பணவீக்கம், 0.11 சதவீதமாக இருந்தது.
கடந்த 2009ம் ஆண்டு, ஜூன் மாதம், மொத்த விலை பணவீக்கம், மைனஸ் 0.40 சதவீதமாக பின்னடைவை கண்டிருந்தது. அதன்பின், இந்தாண்டு ஜனவரியில் தான், மைனஸ் 0.39 சதவீதம் என்ற அளவிற்கு பணவீக்கம் குறைந்துள்ளது. அதே சமயம், 2012ம் ஆண்டு அடிப்படையிலான புதிய கணக்கீட்டு கொள்கைப்படி, இந்தாண்டு ஜனவரியில், சில்லரை பணவீக்கம், 5.11 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பரில், 5 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|