பதிவு செய்த நாள்
22 பிப்2015
04:35
சென்னை:கடந்த வாரத்தில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 376 ரூபாய் குறைந்தது.சென்னையில் நேற்று முன்தினம் 22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம், 2,526 ரூபாய்க்கும் ஒரு சவரன், 20,208 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 27,020 ரூபாய்க்கு விற்பனையானது.இந்நிலையில் நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, ஒன்பது ரூபாய் உயர்ந்து, 2,535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து, 20,280 ரூபாய்க்கு விற்பனையானது. 10 கிராம் சுத்த தங்கம் 90 ரூபாய் உயர்ந்து 27,110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் வெள்ளி 38.90 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 36,365 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த திங்களன்று (16ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,582 ரூபாய்க்கும், ஒரு சவரன், 20,656 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, கடந்த வாரத்தில், தங்கம் விலை கிராமுக்கு 47 ரூபாயும், சவரனுக்கு 376 ரூபாயும் குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|