ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.61.93ரூபாயின் மதிப்பு உயர்வு – ரூ.61.93 ... தங்கம் விலை ரூ.40 அதிகரிப்பு தங்கம் விலை ரூ.40 அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கார் வாரன்டி முக்கியத்துவம் தெரியுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 பிப்
2015
10:51

புதிதாக கார் வாங்குபவர்கள், பார்த்து பார்த்து தான் காரை ஒட்டுவார்கள். சிறியதாக கீறல் விழுந்து விட்டால் கூட, கவலை அடைவார்கள். சில நேரங்களில், புதிய காரில், பெரிய அளவில் பழுது ஏற்பட்டு விடும். அதை சரி செய்ய, அதிக செலவு செய்ய வேண்டி இருக்கும்.இதை கருத்தில் கொண்டு தான், பல்வேறு கார் நிறுவனங்கள், தங்களின் டீலர்கள் மூலமாக, வாரன்டி என்ற பெயரில் ஒரு சலுகையை அளிக்கின்றன. காரின் உதிரி பாகங்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் பாகங்களில், பழுது ஏற்பட்டதால், அதை இலவசமாக சரி செய்து கொடுப்பர்.
* குறைந்தது இரண்டு ஆண்டுகள் அல்லது குறிப்பிட்ட கி.மீ., இயக்கம் வரை, இந்த சலுகை அளிக்கப்படும்.
* தேவைப்பட்டால், குறைந்த கட்டணத்தில், வாரன்டி காலத்தை நீட்டிப்பு செய்து கொள்ளலாம்.
* அங்கீகாரம் பெறாத டீலர்களிடம், காரை பழுது பார்த்தால், வாரன்டி சலுகை கிடைக்காது.
கார் நிறுவனங்கள் தரும் வாரன்டி சலுகை
ஹோண்டா இந்தியா: இந்த நிறுவனம், இரண்டு ஆண்டு அல்லது, 40,000 கி.மீ., இரண்டில் எது முதலில் வருகிறதோ அது வரை, வாரன்டி சலுகை அளிக்கிறது. குறைந்த கட்டணம் செலுத்தி, வாரன்டி காலத்தை குறிப்பிட்ட காலத்திற்கு நீட்டித்துக் கொள்ளலாம்.
போர்டு இந்தியா: இந்த நிறுவனம், இரண்டு ஆண்டுகள் அல்லது, ஒரு லட்சம் கி.மீ., என்ற வகையில், வாரன்டி சலுகை அளிக்கிறது. குறைந்த கட்டணம் செலுத்தி, இதை நீட்டிப்பு செய்யலாம்.
நிசான்: இந்த நிறுவனம், இரண்டு ஆண்டுகள் அல்லது, 50,000 கி.மீ., என வாரன்டி சலுகை அளிக்கிறது. குறைந்த கட்டணம் செலுத்தி, மேலும், இரண்டு ஆண்டுகள் அல்லது, 80,000 கி.மீ., என நீட்டிப்பு செய்து கொள்ளலாம்.
மாருதி சுசூகி: இந்த நிறுவனம், இரண்டு ஆண்டுகள் அல்லது, 40,000 கி.மீ., என வாரன்டி சலுகை அளிக்கிறது. நீட்டிப்பு காலத்தை, ‘கோல்டு, பிளாட்டினம்’ என, இரண்டு பிரிவுகளில் அளிக்கிறது. கோல்டு பிரிவில், 3 ஆண்டுகள் அல்லது, 60,000 கி.மீ., – பிளாட்டினம் பிரிவில், நான்கு ஆண்டுகள் அல்லது, 80,000 கி.மீ., என வாரன்டி சலுகை, குறைந்த கட்டணத்தில், நீட்டிப்பு செய்யப்படுகிறது.
ஹுண்டாய்: இந்த நிறுவனம், ‘இயான், சான்ட்ரோ, ஐ10, ஐ20, எலைட் ஐ20, எக்சென்ட், ஆக்சென்ட் மற்றும் வெர்னா’ மாடல் கார்களுக்கு, கி.மீ., கட்டுபாடு இல்லாமல், இரண்டு ஆண்டுகளுக்கு, வாரன்டி சலுகை அளிக்கிறது. ‘எலன்ட்ரா, சான்டா பீ’ மாடல் கார்களுக்கு, மூன்று ஆண்டுகள் அல்லது, 1,00,000 கி.மீ., – ‘சொனட்டா’ மாடல் காருக்கு, நான்கு ஆண்டுகள் அல்லது, 1,00,000 கி.மீ., என வாரன்டி சலுகை அளிக்கிறது.
செவர்லே: இந்த மாடல் காருக்கு, மூன்று ஆண்டு அல்லது, 1,00,000 கி.மீ., வாரன்டி சலுகை அளிக்கப்படுகிறது.
வோக்ஸ்வாகன்: இந்த நிறுவனம், கி.மீ., கட்டுப்பாடு இல்லாமல், இரண்டு ஆண்டு வாரன்டி சலுகை அளிக்கிறது. இத்துடன், கார் பெயின்ட் பிரச்னைக்கு, மூன்று ஆண்டு வாரன்டி சலுகையை கூடுதலாகவும் அளிக்கிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)