வர்த்தகம் » பொது
வருமான வரி வரம்பில் மாற்றமில்லை ; கார்பரேட் வரி குறைப்பு; சேவை வரி உயர்வு, ரூ.12-ல் விபத்து காப்பீடு! மத்திய அரசு பட்ஜெட் தாக்கல்!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
28 பிப்2015
11:36

புதுடில்லி : 2015-16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அதன் விபரம் வருமாறு...
* பணவீக்கம் 6 சதவீத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்
* பொருளாதார வளர்ச்சிக்காக கடந்த 9 மாதங்களில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்த வீடு என்பது அரசின் லட்சியம்.
* 2020-22-க்குள் அனைவருக்கும் சொந்த வீடு
* ரூபாயின் மதிப்பு 6.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
* அந்நிய லெசாவணி கையிருப்பு 340 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
* உலகளவில் இந்தியாவின் வளர்ச்சி அதி வேகமாக வளர்ந்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதம் உயரும்.
* 2014-15-ல் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. வரும்காலங்களில் 6 கோடி கழிப்பறைகள் கட்ட இலக்கு.
* அடுத்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதம் இருக்கும்
* அனைத்து கிராமங்களிலும் தொலைத்தொடர்பு வசதி செய்யப்படும்.
* பொது முதலீட்டை 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* புதிதாக 1 லட்சம் கிலோ மீட்டருக்கு சாலை அமைக்கப்படும்.
* 2020-க்குள் கிராமம் மற்றும் நகரங்களில் 6 கோடி பேருக்கு வீடுகள் கட்டப்படும்.
* நூறு நாள் வேலைத்திட்டம் தொடரும்
* மேன் இன் இந்தியா திட்டம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்.
* விவசாய கடன்களுக்கு நபார்டு வங்கிக்கு 25 ஆயிரம் கோடி நிதி
* பெண்கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயத்திற்கு முக்கியத்துவம்.
* சிறுதொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் வசதி பெற முத்ரா வங்கி
* மாநிலங்களின் வளர்ச்சிக்கு ரூ.5.24 லட்சம் கோடி ஒதுக்கீடு. முன்பு ரூ.3.38 லட்சம் கோடியாக இருந்தது.
* இரண்டு ஆண்டுகளில் நிதி பற்றாக்குறை 3 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இது இன்னும் குறைக்கப்படும்.
* தேசிய நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.34,699 கோடி ஒதுக்கீடு.
* மதிய உணவு திட்டத்திற்கு 68, 968 ஆயிரம் கோடி
* 2016-17-ல் நிதி பற்றாக்குறை 3.5 சதவீதம் இலக்கு. 2017-18-ல் 3 சதவீதம் இலக்கு.
* காஸ் மானிய திட்டத்தின் மூலம் 11.5 கோடி மக்கள் நேரடியாக பயன் பெற்றுள்ளனர்.
* எம்.பி.க்கள் காஸ் மானியத்தை தவிர்க்க வேண்டும்.
* நகர்புற உள்கட்டமைப்பிற்கு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
* கோரப்படாத ரூ.3000 கோடி பி.எப். நிதியை மூத்த குடிமக்கள் நலனுக்கு பயன்படுத்தப்படும்.
* 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களுக்கு ரூ.330 கட்டணத்தில் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பீடு திட்டம்
* பிரதான் மந்திரி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 கட்டணத்தில் ரூ.2 லட்சத்திற்கு விபத்து காப்பீடு
* பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு ரூ.30,851 கோடி ஒதுக்கீடு
* பெண்களுக்கு ரூ.79.258 கோடி ஒதுக்கீடு
* 5 மெகா அல்ட்ரா எரிசக்தி அமைக்கப்படும்
* கூடங்குளத்தில் 2வது அலகில் 2015-16ல் மின் உற்பத்தி துவங்கும்.
* ஒருகிணைந்த குழந்தைகள் அபிவிருத்தி திட்டத்திற்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு
* ஒருகிணைந்த குழந்தைகள் பாதுகாப்பிற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு
* பிரதமரின் நீர்பாசன திட்டத்திற்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு.
* வீட்டில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு
* அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி.
* செபி உடன் எப்.எம்.சி. இணைக்கப்படும்
* உலகதரத்தில் ஐடி ஹப் அமைக்க முதற்கட்டமாக ரூ.150 கோடி நிதி.
* தமிழ்நாடு, பஞ்சாப், ஹிமாச்சல், அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏய்ம்ஸ் அமைக்கப்படும்.
* பீகார், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு சிறப்பு நிதி.
* நேரடி வரி பெறுவதற்காக தங்கத்தை பணமாக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்ட உள்ளது. இந்திய தங்க நாணயங்களில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு வெளியிடப்படும்.
* பாதுகாப்பு துறைக்கு ரூ.2,46.727 கோடி ஒதுக்கீடு.
* தனிநபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை.
* ஆந்திரா மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஐஐஎம்.
* கறுப்பு பணம் வைத்திருந்தால் வரியிலிருந்து ரூ.300 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
* கறுப்பு பணத்தை மீட்க புதிய சட்டம்.
ரூ.1 லட்சத்திற்கு மேல் பொருட்கள் வாங்கினால் பேன் கார்டு கட்டாயம்.
* கார்பரேட் வரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைப்பு.
* பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவிப்பதை தடுக்க நடவடிக்கை
* ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் வருவாய் உள்ள பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும். வருமான வரி விலக்கு ரூ.2.50லட்சமாக தொடரும் மாற்றமில்லை.
* கறுப்பு பணம் பதுக்கினால் 10 ஆண்டு சிறை
* மருத்துவ காப்பீட்டிற்கான வரிவிலக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக அதிகரிப்பு
* சேவை வரி 12 சதவீதத்திலிருந்து 14ஆக அதிகரிப்பு
* தூய்மை இந்தியா திட்டத்தில் பங்களிப்பவர்களுக்கு முழு வரிவிலக்கு.
* மூத்த குடிமக்களுக்கான காப்பீட்டிற்கு ரூ.30,000 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* பயணப்படி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. ரூ.1600 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
* குட்கா மற்றும் சிகரெட் உள்ளிட் புகையிலை பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும்.
* புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ.50,000 வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், மொத்த செலவினம் 17.77 லட்சம் கோடி, இதில் திட்டமில்லாத செலவினமாக ரூ. 13.12 லட்சம் கோடி. மொத்த வருவாய் ரூ. 14.65 லட்சம் கோடி, இதில் வரி மற்றும் வரியில்லாத வருவாயாக ரூ. 2.21 லட்சம் கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்

புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 28,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்

அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 28,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்

பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 28,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்

ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 28,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்

புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!