பதிவு செய்த நாள்
28 பிப்2015
16:53

மும்பை : மத்திய அரசு தாக்கல் செய்த 2015–16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டால் பங்குசந்தைகளில் அதிகளவில் ஏற்ற – இறக்கத்துடன் இருந்தன. இருப்பினும் இறுதியில் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இதற்கு முன்னர் கடந்தாண்டு மூன்று ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்த போது பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. ஆனால் இந்தாண்டு உயர்வுடன் முடிந்துள்ளன.
மோடி அரசு பொறுப்பேற்ற பின்னர் தாக்கல் செய்யும் முதல்பட்ஜெட் என்பதால் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. இதனால் இன்றைய வர்த்தகம் துவங்கும் போது உயர்வுடன் துவங்கின. பட்ஜெட் தாக்கல் செய்தவற்கு முன்னர் பங்குசந்தைகளில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் உயர்வுடன் இருந்தது. ஆனால் அதன்பின்னர் பட்ஜெட் பற்றிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வௌியாக பங்குசந்தைகள் சரிய தொடங்கின. குறிப்பாக சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்பட்டதால் பங்குசந்தைகள் சரிவை சந்தித்தன. இருப்பினும் கார்பரேட் வரி குறைக்கப்பட்டது உள்ளிட்ட அறிவிப்புகளால் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 141.38 புள்ளிகள் உயர்ந்து 29,361.50–ஆக முடிந்தது. இதேப்போல் தேசிய பங்குசந்தையின் நிப்டி 57.25 புள்ளிகள் உயர்ந்து 8,901.85–ஆக முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ., டாக்டர் ரெட்டி, இந்துஸ்தான் யுனிலீவர், சிப்லா, கெயில் டாடா ஸ்டீல், எச்டிஎப்சி., இன்போசிஸ், ரிலையன்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன. அதேசமயம் ஐடிசி நிறுவன பங்குகள் 8 சதவீதம் சரிவை சந்திதது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|