தங்கம் விலை ரூ.304 அதிகரிப்புதங்கம் விலை ரூ.304 அதிகரிப்பு ... தங்கம் சவரனுக்கு ரூ. 72 குறைவு தங்கம் சவரனுக்கு ரூ. 72 குறைவு ...
சிலிண்டர் விலை ரூ.6.50 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஏப்
2015
11:46

வர்த்தக சிலிண்டர் விலை, 6.50 ரூபாய் உயர்ந்தது. பொதுத்துறையை சேர்ந்த ஐ.ஓ.சி., பாரத், இந்துஸ்தான் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு (14.20 கிலோ); வர்த்தக பயன்பாடு (19 கிலோ) என, இரண்டு வகை, சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும், வர்த்தக பயன்பாடு மற்றும் மானியம் அல்லாத வீட்டு சிலிண்டர் விலையில், எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்கின்றன. அதன்படி, தற்போது, வர்த்தக சிலிண்டர் விலை, 6.50 ரூபாய் உயர்ந்து, 1,327.50 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, கடந்த மாதம், 1,321 ரூபாய் என்ற அளவில் இருந்தது. அதேபோல், வீட்டு சிலிண்டர் விலை, 605.50 ரூபாயில் இருந்து, 614 ரூபாயாக அதிகரித்துள்ளது. காஸ் சிலிண்டர் நேரடி மானிய திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல், வீட்டு வாடிக்கையாளர்களுக்கு, மேற்கண்ட விலையில், சிலிண்டர் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்திட்டத்தில் இணைந்தவர்களுக்கு, மானிய தொகை, வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
முந்தைய மாதங்களில் இருமுறை உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை, நேற்று குறைக்கப்பட்டது; பெட்ரோல் லிட்டருக்கு, 49 பைசாவும், டீசல், 1.21 ரூபாயும் குறைக்கப்பட்டது; நேற்று நள்ளிரவு முதல், இந்த மாற்றம் அமலானது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி, உள்நாட்டில் பெட்ரோலிய பொருட்கள் விலையை, பெட்ரோலிய நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலைகள் நேற்று குறைக்கப்பட்டன. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, சற்று முன்னேற்றம் அடைந்து உள்ளதுதான், விலை சரிவுக்கு காரணம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)