பதிவு செய்த நாள்
16 ஏப்2015
12:59

ராயல் என்பீல்டு நிறுவனத்தின், புல்லட் பைக், இந்தியாவில் மிகவும் பிரபலமானது. இந்த நிறுவனம் சென்னையை மையமாக கொண்டு செயல்படுகிறது. ஒரகடத்தில் இதன் பைக் தொழிற்சாலை உள்ளது. இங்கு, ஆண்டுக்கு, 2.15 லட்சம் பைக்குகளை உற்பத்தி செய்ய முடியும்.
இந்த நிறுவனம், 2013 நவம்பரில், ‘கான்டினென்டல் ஜிடி’ என்ற பெயரில், ஒரு பைக்கை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் ஆன் ரோடு விலை, மும்பையில், 2.23 லட்சம் ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில், சிங்கிள் சிலிண்டர், 535சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வசதி கொண்டது. துவக்கத்தில், இந்த பைக் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் மட்டுமே விற்பனைக்கு வந்தது. தற்போது, கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|