பதிவு செய்த நாள்
16 ஏப்2015
13:01

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, வோக்ஸ்வாகன் நிறுவனம், இந்தியாவில், 2007 முதல், சொகுசு கார் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், சாகன் என்ற இடத்தில், இந்த நிறுவனத்தின் கார் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனம், 2008ல், ‘ஜெட்டா’ மாடல் காரை, இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. கடைசியாக, 2013 அக்டோபரில், ஜெட்டா காரில் சில மாற்றங்கள் செய்து, வெளியிடப்பட்டது.
தற்போது, மேம்படுத்தப்பட்ட ஜெட்டா காரை வோக்ஸ்வாகன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. காரின் வெளிப்புறத்தில், முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்கு, முகப்பு கிரில் உள்ளிட்ட பகுதிகளில், மாற்றங்கள் செய்யப்ட்டுள்ளன. காரின் உட்பகுதியில், ஸ்டியரிங் வீல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும் இந்த கார் கிடைக்கும். பெட்ரோல் காரில், 121 பிஎச்பி 1.4 லிட்டர் டிஎப்எஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் காரில், 138பிஎச்பி 2.0 லிட்டர் டிடிஐ டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கி.ௌச்ட் டிஎஸ்ஜி ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் என இரண்டு வகை டிரான்மிஷன் வசதிகளிலும், இந்த கார் கிடைக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|