பதிவு செய்த நாள்
16 ஏப்2015
13:03

ரெனால்ட் கார் நிறுவனம், இந்தியாவில், மல்டி பர்ப்பஸ் வைக்கிள்– எம்.பி.வி., பிரிவில், ‘லாட்ஜி’ என்ற புதிய வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வாகனம், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளிலும் கிடைக்கும். இரண்டு வகைகளிலும், ஏழு பிரிவுகளில் வாகனம் விற்பனைக்கு வந்துள்ளது. சென்னையில் இந்த வாகனத்தின் விலை, 8.30 லட்சம் ரூபாயில் துவங்கி, 11.90 லட்சம் ரூபாய் வரை உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
* இந்த வாகனத்தில் ஒரே நேரத்தில், எட்டு பேர் வரை சவுகரியமாக பயணம் செய்ய முடியும்.
* எளிதாக ஓட்டவும், எரிபொருள் சிக்கனத்திற்காகவும், இந்த வாகனத்தில்,‘எர்கோ டிரைவ்’ என்ற புதிய தொழில்நுட்பம் இடம் பெற்றுள்ளது.
* பெட்ரோல் காரில், 1.5 லிட்டர் டிசிஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ், ஒருலிட்டருக்கு,21.04 கி.மீ., ஆகும்.
* டீசல் காரில், 1.5 லிட்டர் சிசிஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ், ஒரு லிட்டருக்கு, 19.98 கி.மீ., ஆகும்.
* இந்த வாகனத்தில், 6 கியர் வசதி உள்ளது.
* வாகனத்தை இயக்கும் போது, ஸ்திரமாக பிரேக் பிடிக்க, ஏ.பி.எஸ்., – இ.பி.டி., பிரேக் அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன. வாகனம், 30 கி.மீ., வேகத்தில் செல்ல தொடங்கியதும், வாகன வேகத்தை கட்டுப்படுத்தும் கருவி செயல்பட துவங்கி விடும்.
* டிரைவர் உட்பட அனைவருக்கும், ‘ஏர்பேக்’ பாதுகாப்பு வசதி; சீட் பெல்ட் அணிய நினைவூட்டும் கருவி; கதவு திறந்து இருப்பதை எச்சரிக்கும் கருவி; விபத்து ஏற்படும் போது, தானாக கதவுகளை திறக்க செய்யும் வசதி; பின்புற வைபர்; பார்க்கிங் செய்ய உதவும் சென்சார் வசதி போன்றவை இந்த வாகனத்தில் உள்ளன.
* இரட்டை ஏ.சி., வசதி உள்ளதால், அனைவருக்கும், ஏ.சி., கிடைக்கும்.
* 10,000 கி.மீ., துாரம் அல்லது ஓராண்டு பராமரிப்புக்கு குறைந்த கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
* காரின் எரிபொருள் டேங்க், 50 லிட்டர் கொள்ளளவு கொண்டது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|