பதிவு செய்த நாள்
28 மே2015
12:49

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில், 1998ல், ஸ்போர்ட்ஸ் யுடிலிட்ட வைக்கிள் – எஸ்.யு.வி., பிரிவில், டாடா சபாரி வாகனத்தை அறிமுகம் செய்ததது. இந்தியாவிலேயே, வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட முதல், எஸ்.யு.வி., வாகனம் என்ற பெருமை, டாடா சபாரி வாகனத்திற்கு உண்டு. கடந்த, 2012ல், மேம்படுத்தப்பட்ட டாடா சபாரி வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு, ‘சபாரி ஸ்ட்ரோம்’ என, பெயரிடப்பட்டது. இந்த வாகனத்தில், 2.2 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் வசதி கொண்டது.
தற்போது, மேம்படுத்தப்பட்ட சபாரி ஸ்ட்ரோம் வாகனம் விற்பனைக்கு வந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்களிடம், 10 ஆயிரம் ரூபாய் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து முன்பதிவு செய்யலாம். இந்த வாகனத்தின் விலை, 10.41 லட்சம் ரூபாயில் இருந்து துவங்குகிறது. டிஸ்பிளே ஸ்கிரீன் வசதி கொண்ட புதிய ஆடியோ சிஸ்டம், யு.எஸ்.பி., புளூடூத் வசதி, இவற்றை, ஸ்டியரிங் வீல் பகுதியில் இருந்தே கையாளும் வசதி ஆகிய புதிய வசதிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|