பதிவு செய்த நாள்
28 மே2015
16:37

மும்பை : இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் துவங்கிய நிலையில் சரிவுடன் முடிந்தன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. ஆனால் அதன்பின்னர் முக்கிய நிறுவன பங்குகள் சரிந்ததாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும் இந்திய பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 57.95 புள்ளிகள் சரிந்து 27,506.71–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 15.60 புள்ளிகள் சரிந்து 8,319 புள்ளிகளாகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், ஹீரோ, இன்போசிஸ், ஐடிசி., சிப்லா நிறுவன பங்குகள் உயர்வுடனும், டாடா பவர், சிப்லா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பார்தி ஏர்டெல் மற்றும் சன் பார்மா நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|