பதிவு செய்த நாள்
11 ஜூன்2015
10:11

மும்பை : இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 159.64 புள்ளிகள் உயர்ந்து 27,000.14-புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 31.80 புள்ளிகள் உயர்ந்து 8,156.25 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. நடப்பு கணக்கு பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக குறைந்தது மற்றும் உலகளவில் பங்குசந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் வாங்க தொடங்கியதாலும் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.83 சதவீதமும், ஜப்பானின் நிக்கி 1.44 சதவீதமும் ஏற்றத்துடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|