பதிவு செய்த நாள்
11 ஜூன்2015
13:02

சேலம்: சின்ன வெங்காய விளைச்சலில், கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு வரும் வெங்காய வரத்திலும் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால், விலை உச்சத்தை தொட்டுள்ளது.
சேலம் மற்றும் கோவை மாவட்டத்தில், அதிகளவில், சின்ன வெங்காயம் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில், நடப்பாண்டு, வெங்காய விளைச்சல் எதிர்பார்த்த அளவு இல்லை. கர்நாடக மாநிலம், மைசூரு, குண்டல்பேட்டை, நகரம், தக்கனப்பள்ளி, ஆந்திரா மாநிலம், ரேனிகுண்டா ஆகிய பகுதிகளில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த சின்ன வெங்காயத்தின் வரத்தும் சரிந்துள்ளது.மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து, தமிழகத்தின் பெரிய மார்க்கெட்டுகளாக கருதப்படும், சென்னை - கோயம்பேடு, சேலம் - லீ பஜார் மற்றும் விருதுநகர், நாகர்கோவில் வடசேரி ஆகிய இடங்களுக்கு, வாரத்துக்கு, 1,500 டன் என்ற அளவுக்கு வந்து கொண்டிருந்த சின்ன வெங்காயம், தற்போது, 25 டன்னாக குறைந்துவிட்டது.
இதன் காரணமாக, சமையலுக்கு மிகவும் விரும்பி சேர்க்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலை, விண்ணை எட்டியுள்ளது.
= மே முதல் வாரத்தில், உழவர் சந்தைகளில், கிலோ, 35 ரூபாய்க்கு விற்றது, ஒரு மாத இடைவெளியில், நேற்று, கிலோ, 52 ரூபாயாக எகிறிவிட்டது.
= வெளி மார்க்கெட்டில், கடந்த மாதம், 75 கிலோ எடை கொண்ட மூட்டை, 2,475 ரூபாய்க்கு விற்றது, நேற்று, 3,750 ரூபாய் முதல், 4,750 ரூபாய் வரை, தரத்தை பொறுத்து விற்பனையானது.
= சில்லரை விலை, 55 ரூபாய் முதல், 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.
= பெரிய வெங்காயத்தின் விலையும், நேற்று கிலோவுக்கு, நான்கு ரூபாய் அதிகரித்தது. உழவர் சந்தைகளில், நேற்று முன்தினம், கிலோ, 28 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம், நேற்று, 32 ரூபாயாக உயர்ந்தது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|