பதிவு செய்த நாள்
11 ஜூன்2015
16:57

மும்பை : ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குசந்தைகள் கடும் சரிவுடன் முடிந்தன. நடப்பு கணக்கு பற்றாகுறை குறைந்தது, உலகளவில் பங்குசந்தைகள் காணப்பட்ட உயர்வு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் நல்ல ஏற்றத்துடனயே துவங்கின. ஆனால் மதியத்திற்கு மேல் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்குசந்தைகள் கடும் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 469.52 புள்ளிகள் சரிந்து 26,370.98-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 159.10 புள்ளிகள் சரிந்து 7,965.35-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 29 நிறுவன பங்குகள் சரிவுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ மொபைல் தொடர்பான பங்குகள் 2.37 சதவீதமும், எரிசக்தி பங்குகள் 2.31 சதவீதமும், நுகர்பொருள் பங்குகள் 2.03 சதவீதமும் சரிந்தன.
கடந்த எட்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சென்செக்ஸூம், நிப்டி சரிந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|