பதிவு செய்த நாள்
18 ஜூன்2015
16:30

பஜாஜ் ஆட்டோ நிறுவனம், 2001 முதல், பல்சர் வகை பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. 135 சிசி, 150 சிசி, 180 சிசி, 200 சிசி பிரிவுகளில், பல்சர் பைக் கிடைக்கிறது. தற்போது, பல்சர் ஆர்எஸ் 200 பைக் விற்பனையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தீவிரம் காட்ட துவங்கி உள்ளது.
இந்த பைக்கில், 199.5 சிசி திறன் கொண்ட சிங்கிள் – சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வசதி உள்ளது. வாகனத்தின் முகப்பு மற்றும் பின் பக்கத்தில், எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பைக்கின் மொத்த எடை, 151 கிலோ. 12 லிட்டர் பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டுள்ளது. இளைய தலைமுறையினரின் அதிவேக ஆசைக்கு, இந்த பைக் ஈடு கொடுக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு, இந்த வாகனம், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தை, 4.09 வினாடிகளிலும், 100 கி.மீ., வேகத்தை, 9.92 வினாடிகளிலும் தொட்டு விடும். நகரப்பகுதியில், லிட்டருக்கு, 32.8 கி.மீ., – நெடுஞ்சாலைகளில், 44.9 கி.மீ., மைலேஜ் தரும் எனவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் விலை, 1.18 லட்சம் ரூபாயில் துவங்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|