பதிவு செய்த நாள்
18 ஜூன்2015
16:31

மாருதி சுசூகி நிறுவனம், இந்தியாவில், ‘செலிரியோ’ மாடல் பெட்ரோல் காரை, கடந்த ஆண்டு பிப்., மாதம் அறிமுகம் செய்தது. இந்த கார், பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., என இரண்டு மாடல்களிலும் ,கிடைக்கிறது. மேலும், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் என, இரண்டு பிரிவுகளும் உண்டு. 6 வேரியன்ட்களில், இந்த கார் கிடைக்கிறது.
இந்த சூழ்நிலையில், டீசலில் இயங்கும், செலிரியோ காரை, மாருதி சுசூகி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. இது நாள் வரை, மாருதி சுசூகியின் டீசல் கார்களுக்கு தேவையான, டீசல் இன்ஜின்கள், பியட் நிறுவனத்திடம் இருந்தே பெறப்பட்டு வந்தன. ஆனால்,செலிரியோ காரில், சுசூகி நிறுவனத்தின் சொந்த தயாரிப்பில் உருவான டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில், 793 சிசி திறன் கொண்ட இரண்டு சிலிண்டர் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வசதி கொண்டது.
ஒரு லிட்டர் டீசலுக்க, 27.62 கி.மீ., மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|