பதிவு செய்த நாள்
18 ஜூன்2015
17:28

மும்பை : இந்திய பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் முடிந்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்திலேயே நல்ல ஏற்றத்துடன் துவங்கிய பங்குசந்தைகள் நாள் முழுக்க அதே ஏற்றத்துடன் முடிந்தன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 27 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 8,150 புள்ளிகளையும் தாண்டின.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாதது, இந்திய பங்குகளுக்கு பெடரல் வங்கி அளித்துள்ள ஒத்துழைப்பு, உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியது மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு நன்கு ஏற்றம் கண்டது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் காணப்பட்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 283.17 புள்ளிகள் உயர்ந்து 27,115.83–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 83.05 புள்ளிகள் உயர்ந்து 8,174.60–ஆகவும் முடிந்தன. சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், 10 நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன.
குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில், ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 5 சதவீதம் ஏற்றம் கண்டன. அந்த நிறுவனம் இந்தாண்டு இறுதியில் 4ஜி சேவையை விரிவுப்படுத்துகிறது. இதன்காரணமாக அந்நிறுவன பங்குகள் அதிகளவு ஏற்றம் கண்டன. இவை தவிர்த்து மாருதி சுசூகி, டாக்டர் ரெட்டி, டாடா மோட்டார்ஸ், சன் பார்மா, ஓஎன்ஜிசி., எச்டிஎப்சி., ஹிண்டால்கோ, எஸ்பிஐ., போன்ற நிறுவன பங்குகளும் அதிக ஏற்றம் கண்டன.
2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்காரணமாக வீட்டு கடன் தொடர்பான நிறுவன பங்குகள் 4.28 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|